Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களை விட்டு விலகினால் நஷ்டம் தான்: கூட்டணி கட்சிகளுக்கு ஜெயகுமார் அறிவுரை!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (07:49 IST)
எங்களோடு இருந்தால் தான் கூட்டணி கட்சிகளுக்கு லாபம் கிடைக்கும் என்றும் எங்களை விட்டு விலகி சென்றால் கூட்டணி கட்சிகளுக்கு நஷ்டம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது 
 
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் கூட்டணி கட்சிகளை இணைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது 
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ’கூட்டணியை பொருத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் கூட்டணி ஆக இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும் எங்களை விட்டு விலகிச் சென்றால் அந்தக் கட்சிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த கருத்து கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments