Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 5 ஆண்டுகளில் உச்சம் தொடும் வெப்பநிலை.. ஆர்க்டிக் உருகும்.. கடல் உயரும்! - உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (10:00 IST)

தற்போது உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வரும் நிலையில் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த ஆண்டில் இந்தியாவில் கோடைக்காலத்தில் வழக்கமான அளவு வெயில் பதிவாகாத நிலையில், மழையும் அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் எதிர்வரும் ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஏற்படப்போகும் வெப்பநிலை குறித்து உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, 2025 - 2029க்கு இடையேயான 5 ஆண்டுகளுக்குள் ஆண்டு சராசரி வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த புதிய உச்சமானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள் உலக வெப்பநிலை ஆபத்தான அளவில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும், அதனால் ஆர்க்டிக் பனிப்பிரதேசம் வெப்பமடைந்து உருகுவதுடன், கடல் நீர் மட்டமும் உயரும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments