Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 70 மில்லியன் புது வாடிக்கையாளர்களைப் பெற்ற டெலிகிராம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:08 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட முன்னணி சமூகவலைதளங்கள் 7 மணிநேரம் முடங்கின.

உலகம் முழுவதும் செல்போன் பயனாளர்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் முடங்கியது. இதனால் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று காலை இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம் எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் மார்க் சக்கர்பெர்க் சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்தது.  சில மணி நேரங்களிலேயே 7 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை மார்க் சந்தித்தார்.  இது இந்திய மதிப்பில் சுமார் 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்த 7 மணிநேர முடக்கத்தால் டெலிகிராம் நிறுவனம் நல்ல பலனைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 70 மில்லியன் புதிய பயணர்கள் அந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments