டெலிகிராம் சிஇஓ சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணைக்கு பின் பாவெல் துரோவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஜாமின் தொகையாக நீதிமன்றத்தில் ஐந்து மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி பிரான்ஸ் நாட்டை விட்டு அவர் வெளியேறக்கூடாது என்றும் மாறும் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது/ இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக சட்ட விரோத செயல்களுக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் டெலிகிராம் செயலி துணை போவதாகவும் பயனர்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கைக்கு கண்டனங்களும் குவிந்து வந்தன.