Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் சித்தரவதை செய்வதா? இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:39 IST)
மொராக்கோவை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பல் ஒன்று அவருக்கு பச்சைகுத்தி சித்தரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
17 வயது இளம்பெண்ணை 13 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததோடு, அவளது உடல் முழுவதும் பச்சைகுத்தி சித்தரவதை செய்துள்ளனர். 
 
மோசமான வார்த்தைகளை அந்த பெண்ணை அவமானப்படுத்தும் நோக்கில் பச்சைகுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பெண்ணை அந்த கும்பல் விடுவித்த போதுதான் வெளியே தெரியவந்துள்ளது. 
 
இந்த கொடுமையான நிகழவு குறித்து போலீஸாருக்கு புகார் அளித்த பின்னர், அந்த கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவானோரை தேடி வருகின்றனர். 
 
தற்போது அந்த இளம்பெண் வெளியில் தலைக்காட்ட முடியாமல் அவமானத்தில் வீட்டில் முடங்கி கிடக்கிறார். மேலும், அந்த பெண் எதற்காக கடத்தப்பட்டார் என்பதற்கான பதைல் இன்னும் கிடைக்காததால் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்