Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோட்டலில் டிரம்ப் செய்ததை பதிவு செய்த ரஷ்ய நிபுணர்கள் மீது தேச துரோக வழக்கு!!

ஹோட்டலில் டிரம்ப் செய்ததை பதிவு செய்த ரஷ்ய நிபுணர்கள் மீது தேச துரோக வழக்கு!!
, வியாழன், 2 பிப்ரவரி 2017 (11:38 IST)
டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷியா தன்வசப்படுத்தி அவற்றில் தில்லு முல்லு செய்ததாகவும் கூறப்பட்டது.


 
 
இந்நிலையில் டிரம்ப் தொடர்பான ரகசிய தகவல்களை ரஷியா வைத்திருப்பதாகவும் அதை வைத்து டிரம்பை ரஷியா மிரட்டி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. 
 
கடந்த 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருக்கும் ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில், டிரம்ப் செய்த சில விஷயங்களை ரஷ்யா பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. 
 
இந்த தகவல்கள் வெளியானது தொடரபாக ரஷ்யா 3 அதிகாரிகளை கைது செய்து உள்ளது. குறித்த நபர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் தேச துரோக குற்றம் சுமத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 
 
ஆனால், குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் அமெரிக்க அதிபர்  தேர்தலில், ரஷ்யா சட்டவிரோதமாக ஊடுருவியதில், சிஐஏ வெளியிட்ட உளவுத் தகவல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம்: தவறாக கணித்த ஜோதிடர் அதிரடி கைது!