Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம்: தவறாக கணித்த ஜோதிடர் அதிரடி கைது!

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம்: தவறாக கணித்த ஜோதிடர் அதிரடி கைது!

இலங்கை அதிபர் சிறிசேனா மரணம்: தவறாக கணித்த ஜோதிடர் அதிரடி கைது!
, வியாழன், 2 பிப்ரவரி 2017 (10:52 IST)
இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா இருந்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மரணமடைந்துவிடுவார் என ஒரு ஜோதிடர் கணித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது வரை நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் தவறாக கணித்து பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
இலங்கை கடற்படை வீரரான விஜித ரொஹானா விஜெமுனி ஜோதிடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உடல் நலக்குறைவினாலோ அல்லது விபத்தினாலோ ஜனவரி 27-ஆம் தேதிக்குள் இறந்து விடுவார் என கணித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.
 
ஆனால் அதிபர் சிறிசேனா தற்போது வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதனால் உடனடியாக தனது கணிப்பு தேதியை அக்டோபர் மாதத்திற்கு மாற்றியமைத்தார் அந்த ஜோதிடர். இதனால் இவரது கணிப்பு சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதிபர் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக அந்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட விஜித ரொஹானா கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை ராணுவ அணிவகுப்பின் போது தாக்க முயன்று கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணிவுக்கே பணிவு காட்டுபவன் நான் ; எம்.எல்.ஏ-வை கலாய்த்த ஓ.பி.எஸ் - சட்டசபையில் சிரிப்பலை