Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அதிகாரிகள் குழு

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அதிகாரிகள் குழு
, வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:53 IST)
உக்ரைனில், ரஸ்யா போர்தொடுத்து வரும்  நிலையில் இந்தியர்களை மீட்க புறப்பட்ட  ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பிய  நிலையில் இந்தியர்களை மீட்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்திய விமானம் டெல்லி திரும்பியது.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க  அதிகரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக  இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளதாவது:

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைன் அண்டை நாடுகளாக ஹங்கேரி, போலந்து,ருமேனியா ,  ஸ்லோவக்கியா நாடுகளின்  இந்திய தூதரக அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பம், வேலைக்காரன் படத்தில் நடித்த நடிகர் மீது போக்சோ!