Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழர்கள் விஷ ஊசி போட்டு கொலை: தப்பி வந்தவர் அதிர்ச்சி தகவல்!

தமிழர்கள் விஷ ஊசி போட்டு கொலை: தப்பி வந்தவர் அதிர்ச்சி தகவல்!

Advertiesment
தமிழர்கள்
, புதன், 14 செப்டம்பர் 2016 (12:59 IST)
இலங்கையில் தமிழ் இளைஞர்களை கைது செய்து விஷ ஊசி போட்டு கொலை செய்வதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் இலங்கையில் இருந்து தப்பி இந்தியா வந்த இளைஞர் ஒருவர்.


 
 
முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் அருள் ஜெயரத்தினம் என்பவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என கூறப்படுகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த அவரை கைது செய்து சிறையில் அடைக்க இலங்கை ராணுவத்தினர் முயற்சி செய்தனர்.
 
ரணுவத்திடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பிய அருள் ஜெயரத்தினம் படகு மூலம் தமிழகம் வந்தார். இவரை தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
 
அவரிடம் நடத்திய விசாரணையில் கண்ணீர் மல்க பேசிய அவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று கூறி அப்பாவி தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் கைது செய்து கொழும்பு, கண்டி அருகே உள்ள தனி சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள்.
 
மேலும், சிகிச்சை என்ற பெயரில் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களை அவர்கள் வி‌ஷ ஊசி போட்டு கொல்கின்றனர் என்றும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு : சென்னையில் மூன்று இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்