Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரிட்டன் தேர்தலில் சாதனை படைத்த தமிழ் பெண்..! குவியும் பாராட்டு..!!

Advertiesment
Uma Kumaran

Senthil Velan

, வெள்ளி, 5 ஜூலை 2024 (14:30 IST)
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார். 
 
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
 
650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை. 14 ஆண்டுகளாக பிரிட்டனை வழிநடத்தும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவியது. 
 
இந்தத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்தது. இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டனர்.

 
இந்த நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.  ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் எம்பி ஆவார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம்? மறுபரிசீலனை செய்க: சென்னை உயர்நீதிமன்றம்..!