காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து லண்டனில் வரும் 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லண்டனில் வாழும் தமிழக மக்கள் அங்குள்ள ஈஸ்ட்ஹாம் பகுதியில் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி வரும் தமிழ் புத்தாண்டு 14-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.