ஆப்கானிஸ்தானுக்கு பிரதமர்! அடுத்த டார்கெட் காஷ்மீர்?? – தாலிபான்கள் திட்டம் என்ன?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (09:24 IST)
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் விரைவில் நாட்டின் பிரதமரை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அங்கு நிலையான ஆட்சியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில் நாளைக்குள் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய ஆட்சி பொறுப்புகளுக்கான நபர்களை தாலிபான்கள் நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாலிபான்களின் தலைவர் ஹெபதுல்லா அகுசண்டாவே பிரதமர் பதவியை வகிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தாலிபான்களுக்கு அல் கய்தா அளித்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் ஆயுதம் தாங்கிய விடுதலை போரின் மூலம் பாலஸ்தீனத்தையும், காஷ்மீரையும் மீட்போம் என தெரிவித்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

சென்னை புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments