ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் தலிபான்கள் அதை முழுமையான சுதந்திரம் எனக் கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி சென்றார். அமெரிக்க கூட்டுப்படைகள் ஆப்கனை விட்டு வெளியேற இன்று கடைசி நாள் எனும் நிலையில் நேற்றே கடைசி விமானம் புறப்பட்டு விட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி செய்தார்.
இந்நிலையில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தலிபான்கள் முழுமையான சுதந்திரம் என அறிவித்து கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் காபூல் விமான நிலையமும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.