இனிமேல் அங்கேயும் ஜோடி போட்டு போகக் கூடாது! – ஆப்பு வைக்கும் தாலிபான்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (13:22 IST)
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபான் அமைப்பு தற்போது ஆண்கள், பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு ஒன்றாக செல்ல தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அமைப்பு அந்நாட்டு சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கனில் பெண்கள் படிப்பதற்கு பெண் ஆசிரியர்கள் கொண்ட தனி பள்ளிகளில் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் தனியாக விமான பயணம் செல்லக் கூடாது என புதிய உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு ஆண்கள், பெண்கள் ஒன்றாக செல்லக் கூடாது என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் மட்டுமே இருவரும் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments