ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அங்கு டிவி சீரியல் ஒளிபரப்பிற்கு தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தாலிபான்கள் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சியமைத்தது முதலாக ஆப்கானிஸ்தான் சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் டிவி சீரியல்கள் மற்றும் பெண்கள் இடம்பெறும் சோப்பு, சாம்பு மற்றும் அழகுசாதன பொருள் விளம்பரங்கள் போன்றவற்றை ஒளிபரப்ப தடை விதித்துள்ளனர் தாலிபான்கள்.