அணு ஆயுத சப்ளை குழுவில் இந்தியா இடம் பெற சுவிஸ் முழு ஆதரவு அளிக்கும் என அந்நாட்டு அதிபர் ஜோகன் ஸ்நைடர் அம்மான் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுபயபணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் யோகன் ஸ்நைடர் அம்மான் மற்றும் உயர் மட்டக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், பிரதமர் மோடியும், அம்மானும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, அதிபர் ஸ்நைடர் அம்மான் பேசுகையில், ”அணு ஆயுத சப்ளை குழுவில் இந்தியா இடம் பெற முழு ஆதரவு அளிப்பதாக நாங்கள் உறுதி அளித்துள்ளோம். உலகளாவிய பிரச்னைகளுக்கு சுவிட்சர்லாந்தும் தனது பங்களிப்பை அளிக்க கடமைப்பட்டுள்ளது
இரு நாட்டு உறவு இன்னும் பலம் பெற நாங்கள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். வரி ஏய்ப்பு தொடர்பான விஷயத்தில் சுவிஸ் மற்றும் இந்தியா ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.