உலகில் இயற்கையில் ஆற்றல் எப்போது நிகழும் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.
ஆனால் எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும்கூட இயற்கையின் ஆற்றலுக்கு ஈடுகொடுப்பது கடினமென்பது அனைவரின் கருத்து.
இந்நிலையில், இந்தோனேஷியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது பைக்கில் சென்ற நபர் நூலிழையில் தபித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சியாங்ஜூர் என்ற இடத்தில் ஒரு சிறிய மலை திடீரென்று சரியும்போது அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஒரு நொடியில் தப்பினார். இதைப் பார்க்கையில் நமக்கே திக் திக் என்று இருக்கும்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்?