அமெரிக்காவில் உள்ள ஸ்டார் லைனர் விண்கலத்தில் இன்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்ல இருந்த நிலையில் அவருடைய பயணம் கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் தனியார் நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் லைனர் என்ற நிறுவனம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நாசா வீரர்கள் அடங்கிய குழுவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிய நிலையில் விண்வெளி களம் புறப்படுவதற்கு மூன்று நிமிடத்திற்கு முன்பு திடீரென பயணம் ரத்து செய்யப்பட்டது. விண்கலத்தை ஏவக்கூடிய எந்திரங்களின் செயல்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அநேகமாக இன்று இரவு விண்கலம் புறப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை வெற்றி பெற்றால் விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் இரண்டாவது நிறுவனம் என்று ஸ்டார் லைனர் நிறுவனம் பெருமை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.