Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுந்தர் பிச்சைக்கு பிறந்த நாள்....

Advertiesment
சுந்தர் பிச்சைக்கு பிறந்த நாள்....
, வியாழன், 10 ஜூன் 2021 (15:41 IST)
உலகில் மிகப்பெரிய கூகுள் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிவரும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்தநாள் எனவே இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை , கரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் அமெரிக்காவி உள்ள ஸ்டார்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கச் சென்றார்.

அங்கு படித்தபின்னர் எம்.எஸ் பட்டம் பெற்றார். அதன்பிறகு உலகப் புகழ்பெற்ற வார்டன் பல்கலைகழகத்தி வர்த்தகப் பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

இந்நிலையில் அவர் அமெரிக்கா செல்லும்போது, அவரது தந்தையின் ஒருவருட சம்பளம் அவரது செலவுக்கானதாக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். அப்போதுதான் க்ரோம், மொபைல் ஆபரேட்டிங்கான ஆண்டிராய்ய் உருவாக்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றிவரும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்தநாள். தன்னம்பிக்கையாலும் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்டது ஏன்? முக்கியத் தீர்ப்புகள் என்னென்ன?