அமெரிக்காவில் ஓட்ட பந்தயத்தில் ஓடிய 14 வயது சிறுவன் திடீரென மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இளம் வயது மாரடைப்பு சம்பவங்கள் உலகம் முழுவதும் பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இது மேலும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற மாரடைப்புகளுக்கு சரியான உணவு பழக்கம் இல்லாமை, அதீத மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 5 கி.மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட 14 வயது சிறுவன் நாக்ஸ் மெகீவன் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.