Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் வெடித்தது எரிமலை: மக்கள் பீதி

Advertiesment
மீண்டும் வெடித்தது எரிமலை: மக்கள் பீதி
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
இத்தாலியில் ஸ்ட்ராம்போலி எரிமலை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது.

இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் ஸ்ட்ராம்போலி எரிமலை உள்ளது. கடந்த புதன்கிழமை இந்த எரிமலை வெடித்து அதிக அலவிலான எரிமலை குழம்பை வெளியேற்றியது.

இதில் ஒருவர் பலியானார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று வெடித்துள்ளது. இரவு சுமார் 9 மணியளவில் மிகப்பெரிய சத்ததுடன் எரிமலை வெடித்து குழம்பை கக்கியதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து இத்தாலி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கையில் , ஸ்ட்ராம்போலி தீவில் நிலைமை கட்டுபாட்டில் உள்ளது, இதில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை” என கூறினர்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை, தற்போது வெடித்து ஏற்படுத்திய தக்கமே மிக அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதிப்பெயரை சொல்லி திட்டிய பேராசிரியர் – ஆசிட் குடித்து மாணவி தற்கொலை முயற்சி !