Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானில் பெண்கள், குழந்தைகளின் நிலை- உலக நாடுகள் கூட்டறிக்கை

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (21:42 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் நிலை குறித்துக் கவலை அளிப்பதாக உலக நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.

ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.

இந்நிலையில் அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.

உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்பூர்வமான நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆப்கானில் மீண்டும் பழைமைவாதம் தலைதூக்குமோ என  அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன்  உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன. அதில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பற்றிக் கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஐநா.,சபை இதேபோல் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments