வெப் கேமராவை ஆன் செய்யாததால் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர் வெப்கேமிராவை ஆன் செய்யாமல் இருந்ததால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்
இதனையடுத்து தான் நியாயமற்ற முறையில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு ஊழியரை வீடியோ கண்காணிப்பு செய்வது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது போன்றதாகும் என்றும் வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை வெப்கேமிராவை ஆன் செய்ய சொல்வது மனித உரிமை மீறலாகும் என்றும் தெரிவித்துள்ளது
இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியருக்கு இந்திய மதிப்பில் சுமார் 59 லட்சம் அபராதமாக அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.