சிங்கள ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் ஈழத் தமிழர்களை கழுத்து அறுப்பேன் என மிரட்டிய வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து அவரை இலங்கை அரசு பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடத்திய தமிழர்களை கழுத்தை அறுப்பேன் என பிரியங்க பெர்னாண்டோ மூன்று முறை சைகையால் மிரட்டிய வீடியோ ஓன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து இங்கிலாந்து எம்பிக்கள் பிரியங்க பெர்னாண்டோவை நாடு கடத்துமாறு இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அவரை சஸ்பெண்ட் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சர்சைக்குரிய ராணுவ அதிகாரி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.