இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் அனுர குமார திசநாயக பதவியேற்ற நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் நட்பு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூர் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், அதே நேரத்தில், இலங்கையின் வெளியுறவு கொள்கை நாட்டின் இறையாண்மையை பேணுவதை கவனத்தில் கொள்வோம் என்றும், புவிசார் அரசியல் பிரச்சினைகளில் நாங்கள் தலையிட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிடமும் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும், இரண்டு நாடுகளுடன் நட்பை பெற முயற்சிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம் என்றும், அதேபோல் ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் நட்பு உறவை ஏற்படுத்த முயற்சி செய்வோம் என்றும் அனுர குமார திசநாயக தெரிவித்துள்ளார்.