இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் தோற்றதிற்கு தமிழர்களே காரணம் என்று கூறி சிறையில் அவர்களை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி சிறைவாசிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் வதைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் 49 தமிழ்க் கைதிகளும் சிறிய அறையொன்றுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கு மலசலகூட வசதிகளையேனும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் ஆட்சிமாற்றத்திற்கு தமிழர்களே
காரணம் என்பதைப் போல சிறை அதிகாரிகள் நடந்து கொள்வதாகவும், கடும் தொனியில் எச்சரிப்பதாகவும் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி, கைதிகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.