Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் - கிம் சந்திப்பில் தென்கொரிய அதிபர் பங்கேற்பு!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (11:22 IST)
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
டிரம்ப் மற்றும் கிம் வரும் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க, வடகொரிய வெளியுறவு துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
 
இதற்கு முன்னர் அதிபர் கிம்முடனான சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அண்மையில் தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் பொறுமையை கடைப்பிடித்தார் அதிபர் கிம்.
 
மேலும், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பதிலளித்தார். இதனால் டிரம்ப், மீண்டும் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், தற்போது டிரம்ப் - கிம் சந்திப்பில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது என தென் கொரிய தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்புக்கு பின்னர் மூன்று நாட்டு தலைவர்களும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments