வடகொரியாவின் ட்ரோன்கள் தென்கொரியாவிற்குள் நுழைந்த நிலையில் தென்கொரியா ராணுவம் விமானத்தை அனுப்பி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி வடகொரியா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. சமீபத்தில் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தபோது அதில் இரண்டு தென்கொரிய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சென்று விழுந்ததால் சர்ச்சை எழுந்தது.
ஆனாலும் வடகொரியா தொடர்ந்து எதையாவது செய்து அண்டை நாடுகளை தொந்தரவு செய்து வருகிறது. தற்போது வடகொரியா தனது உளவு ட்ரோன்களை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது. அதில் சில ட்ரோன்கள் எல்லை மீறி தென்கொரியாவின் தலைநகரான சியோலுக்கு அருகேயே சென்றுள்ளன.
இதனால் பொறுமையிழந்த தென்கொரியா ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை அனுப்பியது. ட்ரோன்களை துரத்தி சென்ற தென்கொரிய விமானங்கள் ட்ரோன்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டனவா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதனால் இருநாட்டு எல்லையில் பரபரப்பு எழுந்துள்ளது.