Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்நாப் சாட்டிலும் ட்ரம்ப்புக்கு தடா! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (08:16 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்துகள் நிறவெறிக்கு ஆதரவாக இருப்பதால் அவரது கருத்துகளை ப்ரமோட் செய்யப் போவதில்லை என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின இளைஞர் ஒருவரை விசாரணை செய்த போலீசார் அவரை கீழே தள்ளி கழுத்தில் காலால் நெறித்து கொலை செய்தார். அது சம்மந்தமாக வீடியோ ஒன்று பரவி உலகெங்கும் கண்டனங்களைப் பெற்றது. இதனையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் .

இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் கணவரின் செயல் தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும், அதனால் ஆழ்ந்த வேதனைக்குள்ளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த போராட்டக்காரர்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘கலைந்து செல்லவில்லை என்றால் சுடப்படுவீர்கள்’ என்று டிவீட் செய்ய, அது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என டிவிட்டர் நிர்வாகம் அதை நீக்கியுள்ளது. மேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தங்கள் முகப்புப் புகைப்படத்தை கருப்பு நிறத்தில் மாற்றி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 22 கோடி பேரால் பயன்படுத்தப்படும் ஸ்நாப் சாட்டில் டர்ம்ப்பின் கணக்கை ப்ரமோட் செய்யப்போவதில்லை என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது கணக்கு அப்படியே தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments