டூனா என்ற வகை மீன் தலை துண்டான பிறகும் துடிக்கும் வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜப்பான் நாட்டில் மீன் கடை ஒன்றில் மஞ்சல் நிற டூனா வகை மீன் விற்பனை செய்யப்படுவதற்காக வெட்டி வைக்கும் போது துடித்த வீடியோ காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது. தலையை துண்டித்த பிறகும் அந்த டூனா மீன் இறக்காமல் 1 நிமிடத்திற்கு மேல் துடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு சிலர் விளக்கம் அளித்துள்ளனர். மூளை இறந்தாலும் தசைகளில் உள்ள நியூரான்கள் மின் சமிக்ஞைகளால் தூண்டப்படலாம். இதனால் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.