Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 வயது தங்கையை பலமுறை கற்பழித்த அண்ணன்!

4 வயது தங்கையை பலமுறை கற்பழித்த அண்ணன்!

Advertiesment
4 வயது தங்கையை பலமுறை கற்பழித்த அண்ணன்!
, வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (15:15 IST)
லண்டனில் 4 வயது சிறுமி ஒருவரை அவரது 12 வயதான அண்ணன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தற்போது 13 வயதாகும் சிறுவன் ஒருவன் தனது ஒன்றுவிட்ட தங்கையை கடந்த ஓராண்டாக பலமுறை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என அந்த சிறுமியிடம் அறிவுறுத்தியும் வந்துள்ளான்.
 
இதற்காக ஸ்கிட்லெஸ் எனப்படும் சாக்லெட்டை சிறுமிக்கு நிறைய கொடுத்து வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்து வந்துள்ளான். இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக விளையாடுவது வழக்கம். அப்போது தான் சிறுவன் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
 
இதனை அந்த சிறுமி தனது தாயுடன் வெளிப்படையாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. பிரைட்டன் யூத் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. அந்த சிறுவனின் மொபைல் போனில் அதிகமான ஆபாச காட்சிகள், படங்கள் இருந்துள்ளதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இதனையடுத்து சிறுவனுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த சிறுவனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா மற்றும் சிறுவனுக்கு சிறை தண்டனை வழங்க வழிவகை உள்ளதா என்பது குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16வயது இந்திய சிறுமியை மணமுடித்த 65வயது ஓமன் ஷேக்