Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்-சிங்கள மாணவர்கள் மோதல்: பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது

Advertiesment
தமிழ்-சிங்கள மாணவர்கள் மோதல்: பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டது
, ஞாயிறு, 17 ஜூலை 2016 (15:41 IST)
யாழ்ப்பாணத்தில் தமிழ்-சிங்கள மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.


 


இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அப்போது தமிழ் கலாசார முறைப்படி வரவேற்பு நடனம் நடத்த வேண்டும் என தமிழ் மாணவர்கள் வலியுறுத்தினர். கண்டியா நடனம் நடத்தி வரவேற்க வேண்டும் என சிங்கள மாணவர்கள் வற்புறுத்தினர். இதனால் இருதரப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையருவர் தாக்கி கொண்டனர்.

இதனால் பலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்தது விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி காயம் அடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, காலவரையின்றி மூடப்பட்டது. அதற்கான உத்தரவை பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் பிறப்பித்துள்ளார்.  விடுதிகளில் தங்கியிருக்கும் மருத்துவ சிங்கள மாணவர்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயிலில் அடிப்பட்டு 78 செம்மறி ஆடுகள் பலி