Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேடையிலேயே பாடகிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர்! (வீடியோ இணைப்பு)

மேடையிலேயே பாடகிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர்! (வீடியோ இணைப்பு)

Advertiesment
மேடையிலேயே பாடகிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர்! (வீடியோ இணைப்பு)
, ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (18:09 IST)
இத்தாலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி எம்மா மாரோன் மேடை ஏறி பாடினார். அப்போது நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்துவதற்காக அவருக்கு ஒரு நபரை விட்டு செக்ஸ் தொல்லை கொடுக்க வைத்திருக்கிறார் நிகழ்ச்சி தயாரிப்பாளர். இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்மா மாரோன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அவரை பின்புறமாக வந்து அவரது பின்புறத்தை முத்தமிட்டார். ஆனால் எம்மா மாரோன் அவரை தள்ளிவிட்டுவிட்டு தனது பாடலில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தார்.

 

நன்றி: The Independent
 
ஆனால் அந்த நபர் விடாமல் திரும்ப திரும்ப எம்மா மாரோன் மீது தனது பாலியல் ரீதியிலான சீண்டல்களை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார். இதனை பார்த்துக்கொண்டிருந்த நடுவர்கள் அதனை ரசித்து சிரித்துக்கொண்டு தான் இருந்தார்.
 
ஆனால் பின்னர் தான் தெரியவந்தது நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல அதன் இயக்குனர் தான் போலியாக ஒரு நபரை அனுப்பி இப்படி செய்ய வைத்திருக்கிறார். மேடையில் ஒரு பெண்ணை இப்படி செய்ததற்காக இத்தாலிய மகளிர் அமைப்புகள் அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குருவுக்கும் தொடர்பு?: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!