துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண்..

Webdunia
சனி, 31 ஆகஸ்ட் 2019 (09:32 IST)
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சீக்கிய பெண்ணை துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை, அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின்பு அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளனர்.

பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தனது பெண் மதமாற்றப்பட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த தகவலை அறிந்த பெற்றோர் பெரும் மனவேதனை அடைந்தனர். தங்கள் வீட்டுப் பெண்ணை மீட்டு பத்திரமாக வீடு திரும்ப உதவுமாறு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆகியோரிடம் உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் சீக்கிய அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த சீக்கிய பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments