அமெரிக்க நாட்டின் விர்ஜீனிய பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.
அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் பிரச்சித்தி பெற்ற பல்கலைக்கழமான விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில், நேற்றிரவு புகுந்த பல்கலைக்கழக மாணவர் கிரிஸ்டோபர் டார்னெல் ஜோன்ஸ் என்பவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியவரின் புகைப்படத்தை போலீஸார் பொதுமக்களுக்கு வெளியிட்டி வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வகுக்குகள் சில நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.