Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் புகார்கள்: கலைக் கட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல்

Advertiesment
பாலியல் புகார்கள்
, செவ்வாய், 11 அக்டோபர் 2016 (11:48 IST)
அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவர் மீது ஒருவர் புகார்களை அடுக்கி வருகின்றனர். 

 
சில நாட்களுக்கு முன்னர் ஹிலாரியின் ஆதரவாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த டொனால்ட் டிரம்ப் நடித்த வீடியோவை வெளியிட்டனர்.
 
இந்த வீடியோவில் பெண் ஒருவரை செக்ஸுக்கு டிரம்ப் அழைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது, டிரம்ப்பின் ஆதரவாளர்களே அவருக்கு எதிராக திரும்பினர். இன்னும் சிலர் அவர் அமெரிக்க தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
 
இதனால் கொந்தளிப்பில் உள்ள டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளர்கள், ஹிலாரி தரப்பினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது கணவர் கிளிண்டனின் பழைய கள்ளத்தொடர்பு சம்பவங்களை வெளியிட முடிவெடுத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற பாஜக முன்னாள் எம்.பி தருண் விஜய் வழிபாடு