தெற்கு ஈரானில் அடுத்தடுத்து ஏழு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து வெளியேறி மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து ஏழு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் அலுவலகங்கள் வணிக வளாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதாக தெரிகிறது.
இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் மக்கள் வீட்டிற்குள் செல்ல அச்சப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்த சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது