Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி நிலையிலும் நிர்வாண போஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிரடி

Advertiesment
, புதன், 28 ஜூன் 2017 (04:02 IST)
உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவ்வப்போது கவர்ச்சியான போஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துபவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது அவர் கர்ப்பமாக உள்ள நிலையிலும் நிர்வாண போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.



 


36 வயதான செரீனா வில்லியம்ஸ் வானிடிஃபேர் என்ற புத்தகத்தின் அட்டைப்படத்திற்காக முழு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்.  நிர்வாண கோலத்தில் தன் கர்ப்பமான வயிறை காட்டும் வகையில் வெளியாகியுள்ள இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தாய்மை என்ற புனிதமான நிலையில் உள்ள செரீனா, பணத்திற்காக ஒரு புத்தகத்தின் அட்டைப்படத்தில் தோன்றுவது அவருடைய புகழுக்கு நல்லதல்ல என்று டுவிட்டரில் பலர் கருத்து கூறியுள்ளனர்.

செரினா வில்லியம்ஸ் ரெட்டிட் நிறுவனத்தின் உரிமையாளர் அலெக்ஸ் ஒஹானிய என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் யாருமே தலைவர் இல்லை: இது வெல்லமண்டியின் விளக்கம்