Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊழல் வழக்கில் சிக்கிய ‘சாம்சங்’!!

Advertiesment
ஊழல் வழக்கில் சிக்கிய ‘சாம்சங்’!!
, செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:16 IST)
தென்கொரியாவில் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.


 
 
தென்கொரிய பெண் அதிபர் பார்க் ஷியுன்-ஹை. இவரது நண்பர் சாய் சூன்-சில். இவர் அதிபர் பார்க்கின் நட்பை பயன்படுத்தி பல நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
 
குறிப்பாக தென் கொரியாவை தலைமையிடமாக கொண்ட ‘சாம்சங்’ நிறுவனத்தில் சாய் சூன்- சில் மகள் லஞ்சப்பணம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
 
சமீப காலமாக இந்த விவகாரம் அங்கு பூதாகரமாக எழுந்துள்ளது. அதிபர் பார்க் பதவி விலக வலியுறுத்தி தென் கொரியாவில் மிக பிரமாண்ட பேரணி மற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
 
இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சாம்சங் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 
ஊழல் விவகாரத்தை சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் வேறு விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 மணிநேரம் உடற்பயிற்சி செய்த ஜெயலலிதா இயல்பாக மூச்சு விடுகிறார்?