பாத்ரூமில் செல்போனை சார்ஜ் போட்ட இளம் பெண் பரிதாப பலி!

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:19 IST)
பாத்ரூமில் செல்போனை சார்ஜ் போட்ட இளம் பெண் பரிதாப பலி!

செல்போன் சார்ஜ் போட்டு கொண்டே குளித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ரஷ்யாவை சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஒருவர் பாத்ரூமில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு பாத்டேபில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த மொபைல் போன் தவறுதலாக அவர் குளித்துக் கொண்டிருந்த குளியல் தொட்டியில் விழுந்தது 
 
இதனை அடுத்து சார்ஜரில் இருந்த மின்சாரம் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீரில் பாய்ந்ததால் அந்த இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களும் தண்ணீரும் பொருந்தாது என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்று பாத்ரூமில் குளிக்கும் போது சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments