உக்ரைனை ரஷ்யா தாக்க தொடங்கியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் இருந்து உக்ரைனை உலக நாடுகள் காப்பாற்ற வேண்டும் என உக்ரைன் பிரதமர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அதேசமயம் இந்த போர் விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட்டால் கடும் விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போர் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.