Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனின் மேலும் 4 இடங்களில் போர் நிறுத்தம்! – ரஷ்யா அறிவிப்பு!

Advertiesment
உக்ரைனின் மேலும் 4 இடங்களில் போர் நிறுத்தம்! – ரஷ்யா அறிவிப்பு!
, திங்கள், 7 மார்ச் 2022 (11:20 IST)
உக்ரைனுடன் இன்று ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில் போர் தாக்குதலை நிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனில் உள்ள பிற நாட்டவர்கள் அங்கிருந்து எல்லை வழியாக தப்பி செல்லும் நிலையில், உக்ரைன் மக்களே பலர் அகதிகளாகி உள்ளனர்.

இந்நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

முன்னதாக ஏற்கனவே சில இடங்களில் தாக்குதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது கார்கிவ், கீவ் உள்ளிட்ட முக்கியமான 4 நகரங்களிலும் ரஷ்யா தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. போர் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சரிந்தது சென்செக்ஸ்: இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகள் சரிவு!