Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மற்றொரு கொரோனா தடுப்பூசியும் தயார்! – அதிபர் புதின் மகிழ்ச்சி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:34 IST)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முதலாவதாக தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்யா மற்றுமொரு தடுப்பூசியும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

முன்னதாக இந்த தடுப்பூசி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், பிறகு இது பாதுகாப்பானது என உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வெக்டர் ஆய்வு மையத்தின் “எபிவாகொரோனா” என்ற இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், அக்டோபர் 15க்குள் இதன் பதிவு செய்யும் பணிகள் முடிய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments