Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 278 கோடி கடனை ஏற்ற கோடீஸ்வரர் ! நெகிழ்ந்த மாணவர்கள்

ரூ. 278 கோடி கடனை ஏற்ற கோடீஸ்வரர் ! நெகிழ்ந்த மாணவர்கள்
, செவ்வாய், 21 மே 2019 (16:00 IST)
அமெரிக்க நாட்டில் உள்ள வாஷிங்டனில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் கலந்துகொண்ட கோடீஸ்வரர் ஒருவர் அங்கு படித்த சுமார் 430 மாணவர்களின் கல்விக் கடனான ரூ 278 கோடியை தானே ஏற்பதாக அறிவித்தார். இதனால் மாணவர்கள் உட்பட கல்லூரி நிர்வாகத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா மாகாணத்தில் மோர்ஹவுஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் சிறப்பு என்னவென்றால் இங்கு படிப்போர் அனைவரும் கறுப்பினத்தவர்கள் ஆவர்.
 
மேலும் இங்கு படிப்போர் அனைவரும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வங்களின் லோன் வாங்கி கல்விக்கட்டணம் செலுத்தியுள்ளனர்.
 
இந்நிலையில்  இக்கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.இதில் 430 மாணவர்கள் கலந்து கொண்டு பட்டம் பெற்றனர்.
 
அப்போது, தொழிலதிபர் ராபர்ட் எப் ஸ்மித் கூறியதாவது :
 
கடந்த 8 தலைமுறையாக எங்கள் குடும்பம் இங்கு வசித்து வருகின்றது. எனவே இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை நான் அடைக்கப் போகிறேன். இதேபோல் இனிவரும் காலங்களில் என் குடும்பம் இந்தப் பணியைச் செய்யும் என்று உறுதிகொடுத்தார். இதைக் கேட்ட மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். 
 
ராபர்ட் எப் ஸ்மித் தான்அடைப்பதாகக் கூறிய கல்விக் கடன் தொகை ரூ. 278 கோடி ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரான் மொத்தமாக அழிந்துவிடும்: எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!