இன்றைய உலகில் மளிகைக் கடை முதல் மால்கள் வரை எங்கு சென்றாலும் மக்கள் விரும்பிக் குடிப்பது கூல்டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்கள் தான். இந்த குளிர்பான விளம்பரங்களுக்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.
உலகிலேயே முதன்முறையாக, சிங்கப்பூர் அரசு குளிர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் சட்டம் மற்றும் சுகாதாரத்துறை மூத்த அமைச்சர் எட்வின் வெளியிட்டுள்ளார்.
அதில், சர்க்கரை கலந்துள்ள குளிர்பான விளம்பரங்களை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், செய்தித்தாள் , இதழ்கள் ஆகிய எதிலும் இனிமேல் வெளியிடக்கூடாது என தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் அரசின் தற்போதைய முடிவு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் கூட சில வருடங்களுக்குப் பிறகு இதுகுறித்து தெரிந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.