Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

91 குழந்தைகளை பலாத்காரம் செய்த ரிச்சர்ட் ஹக்லே இந்தியாவுக்கும் வந்துள்ளார்

91 குழந்தைகளை பலாத்காரம் செய்த ரிச்சர்ட் ஹக்லே இந்தியாவுக்கும் வந்துள்ளார்
, புதன், 8 ஜூன் 2016 (18:54 IST)
மலேசியாவில் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியர் ரிச்சர்ட் ஹக்லே பெங்களூரில் உள்ள குழந்தைகளுக்கான புதிய நம்பிக்கை அனாதை இல்லத்துக்கு 2013-ஆம் ஆண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.


 
 
இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சார்ட் ஹக்லே என்ற ஆங்கில ஆசிரியர் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். இவருக்கு 22 ஆயுள் தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது.
 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகபணியாற்றிய இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான ரிச்சார்ட் ஹக்லே, குழந்தைகள் மீதான பாலியல் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 
அந்த கான்வெண்டில் படிக்கும் கிறிஸ்தவ ஏழை குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். 12 வயதுக்கும் கீழ் உள்ள மாணவர்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவர்.
 
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற ரிச்சார்ட் ஹக்லே 2014-ஆம் ஆண்டு கேட்விக் விமான நிலையத்தில் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
 
இங்கிலந்தின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் மீதான வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இந்த விசாரணையில் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ரிச்சார்ட் ஹக்லே மற்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாலும், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகியதால் ஆசிரியர் ரிச்சார்ட் ஹக்லேக்கு 22 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
 
இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு புகைப்படம் எடுப்பவராக பெங்களூரில் உள்ள குழந்தைகளுக்கான புதிய நம்பிக்கை அனாதை இல்லத்துக்கு வந்ததாக அந்த அனாதை இல்லம் பேஸ்புக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில், இங்கிலாந்து புகைப்படக்காரர் ரிச்சர்ட்  ஹாக்லே மலேசியாவில் 91 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனை வழங்கபட்டு உள்ள செய்தியை படித்தோம்.
 
சில வருடங்களுக்கு முன்னர் ரிச்சர்ட் ஹாக்லே புதிய நம்பிக்கை அனாதை இல்லத்துக்கு வந்தார். பாதிரியார் ஜார்ஜின் வேலை தொடர்பான வீடியோ எடுக்கும் பணிக்கு வந்து இருந்தார்.
 
அந்த நேரத்தில் குழந்தைகள் யாரும் பாதுகாப்பாளர்கள் இல்லாமல் அனுமதிக்கப்படவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தியாவில் எந்த குழந்தையும் அவரால் பாலியல் ரீதியில் பாதிக்கபடவில்லை என பாதிரியார் ஜார்ஜ எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார் என குழந்தைகளுக்கான புதிய நம்பிக்கை அனாதை இல்லத்தின் பேஸ்புக் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுக்கு இறங்கு முகம்தான்: அதிமுக, பாஜக குறித்து கூறிய கருணாநிதிக்கு பொன்னார் பதில்