Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மறுவாக்கு எண்ணிக்கை: அமெரிக்க தேர்தல் முடிவுகளில் திருப்பம்??

மறுவாக்கு எண்ணிக்கை: அமெரிக்க தேர்தல் முடிவுகளில் திருப்பம்??
, சனி, 26 நவம்பர் 2016 (10:33 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, புதிய ஆட்சி அமைக்க முற்பட்டுள்ளார்.


 

 
இந்நிலையில் விஸ்கான்ஸின், மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா  மாநிலத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக தெரிகிறது.
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி க்ளிண்டன் போட்டியிட்டனர். அவர்களைத் தவிர லிபெர்டேரியன் கட்சி சார்பில் கேரி ஜான்சன் மற்றும் க்ரீன் கட்சி சார்பில் ஜில் ஸ்டேன் போட்டியிட்டனர். 
 
தற்போது க்ரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டேன் விஸ்கான்ஸின், மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். விஸ்கான்ஸின் மாநில தேர்தல் ஆணையம் அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. 
 
இந்த மாநிலங்களில் ஹிலாரி நிச்சயம் வெற்றி பெறுவார் என நம்பப்பட்டது. அதேபோல் அமெரிக்க தேர்தலில் ஓட்டு சீட்டு முறை, இயந்திர முறை, இ-மெயில் முறையில் ஓட்டுப்போடுதல் போன்ற முறைகளில் ஓட்டு பதிவு நடைபெறுகிறது.
 
இதில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட 3 மாகாணங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்பட்ட ஓட்டு இயந்திர முறை பயன்படுத்தப்பட்டது. 
 
அந்த தொகுதியில் ஹிலாரி தோல்வியை தழுவியதையடுத்து அந்த ஓட்டு இயந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் கூறி இருக்கிறார்.
 
எனவே ஹிலாரி தரப்பும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு குரல் கொடுத்துள்ளது.
 
ஆனால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தினாலும் ஹிலாரியின் வெற்றி சாத்தியமில்லை எனவே அதிபராக பொறுப்பு ஏற்பதில் டொனால்ட் டிரம்புக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட உயர் சிகிச்சை?: வரவழைக்கப்பட்ட இரத்த உறவு!