மலேசியாவை தலமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏர் ஆசியா விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் போஸ்டர் வரையப்பட்டுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ 2 கோடி பேர்களுக்கும் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், கபாலி படத்தின் ஏர்லைன் பார்ட்னரான ஏர் ஆசிய நிறுவனம், தங்கள் விமானத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கபாலி படத்தின் போஸ்டரை வரைந்து வைத்துள்ளது. மேலும், தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் இந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சினிமா வரலாற்றில், ஒரு நடிகரின் உருவத்தை விமானத்தில் வரைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.