இலங்கையில் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற எம்.பிக்களை பேச்சுவார்த்தைக்கு அதிபர் ராஜபக்ஷே அழைத்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதே அரிதாகியுள்ளது. இதனால் மக்கள் இலங்கை முழுவதும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர். இதனால் இலங்கை அரசியல் சூழலில் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவளித்து வந்த 41 எம்.பிக்கள் ஆதரவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்பிக்கள் ஆதரவு வாபஸால் இலங்கையில் ராஜபட்சே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாபஸ் பெற்ற 14 எம்.பிக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளார்.