தேர்தலில் வென்றாலும் ராஜபக்சேவுக்கு பிரதமர் பதவி கிடையாது என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேன கடிதம் எழுதியுள்ளார். அதில், ”இலங்கை அதிபராக ராஜபக்சே செயல்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அதிபர் பதவியை தக்கவைக்க ராஜபக்சே, மேற்கொண்ட முயற்சிகள் சட்டவிரோதமானவை.
கட்சியில் மூத்த தலைவர்களில் வேறு ஒருவரை தான் பிரதமராக நியமிப்போம், ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க தனக்கு விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
ஆனால், ராஜபக்சேவின் இனவாத பிரசாரங்கள் சிங்களர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஆனால் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லீம்கள் மத்தியில் ராஜபக்சேவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால், வாக்குகளை பெறுவதற்காக சிறிசேன இவ்வாறு கடிதம் எழுதியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பாக ராஜபக்சே, இன்று நடைபெறும் பிரசார கூட்டத்தில் பதில் அளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அதிபர் சிறிசேனாவின் அறிவிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.